
கார்த்தியின் சர்தார் - தெலுங்கில் வெளியிடும் நாகார்ஜுனா
இது பற்றிய அறிவிப்பை நேற்று அறிவித்தார்கள். ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்கள்.
அதற்கு நன்றி தெரிவித்து கார்த்தி, “நான் நாகார்ஜுனா காரு உடன் இருக்கும் போது என்னைப் பற்றி சிறப்பாக உணர வைப்பார். இப்போது எனது படத்தை அவர் வெளியிடுவது எனக்கு இன்னும் வலிமையாக உணர வைக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு நாகார்ஜுனா, “அன்புள்ள கார்த்தி, எனது சகோதரா, உன்னுடன் செலவிட்ட அந்த நேரங்கள் இனிமையானவை, இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன். தம்புடு, நீங்கள் இன்னும் சாதிப்பீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என பதிலளித்துள்ளார்.
தற்போது விஜய் நடிக்கும் "வாரிசு" படத்தை இயக்கி வரும் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், கார்த்தி, நாகார்ஜுனா இருவரும் "தோழா" படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!