
ஒரே படத்தில் அறிமுகமாகும் 4 ஹீரோயின்கள்
படம் பற்றி ரத்தன் லிங்கா கூறியதாவது: இது இன்றைய காலத்துப் பெண்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. படத்தில் நல்ல செய்தி ஒன்றும் சொல்லப்பட்டுள்ளது. "இந்த உலகத்தில் உன்னைக் காப்பாற்ற யாராலும் முடியாது. நீயே தான் உன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் " என்கிற கருத்து அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு இருந்து தன்னைக் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று புரிய வைக்கும்.
இதற்கு எந்தவிதமான நட்சத்திர பலமும் தேவையில்லை என்பதால் புதுமுகங்களை வைத்து உருவாக்கி இருக்கிறோம். ஏனென்றால் இந்தக் கதைக்குப் புதுமுகங்கள் நடித்தால்தான் சரியாக இருக்கும். அப்படி முதன் முதலில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் தான் மதுஸ்ரீ அதன் பிறகு பலர் வந்து சேர்ந்தார்கள். என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!