
பிரமிக்க வைக்கும் பிரம்மாஸ்திரம் டிரைலர்
நீர், காற்று, நெருப்பு ஆகியவை பண்டைய காலத்திலிருந்தே இந்த சக்திகள் சில அஸ்திரங்களுக்குள் நிறைந்திருக்கிறது. இது போல இருக்கும் அஸ்திரங்களுக்கெல்லாம் அதிபதி பிரம்மாஸ்திரம். அந்த மகா பிரம்மாஸ்திரத்திற்கான அதிபதியே தான் தான்னு தெரியாத ஷிவா என்ற இளைஞனைப் பற்றிய கதைதான் இந்த முதல் பாகம்.
நெருப்பு சக்தி அடங்கிய ஷிவா கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, மவுனி ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆலியா பட், ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்துள்ளார். டிரைலரில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் காட்சிகள் வியக்க வைக்கின்றன.
"பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2" ஆகிய படங்கள் பாலிவுட்டில் பெரிய வெற்றியைப் பெற்றன. அந்தப் படங்களில் இருந்த பிரம்மாண்டத்தை இந்த பிரம்மாஸ்திரம் டிரைலரில் காண முடிகிறது.
இப்படி ஒரு படத்திற்காகத்தான் பாலிவுட் ஏங்கிக் கொண்டிருக்கிறது என தாரளமாகச் சொல்லலாம். இந்த வருடம் செப்டம்பர் 9ம் தேதி இந்தப்ப டம் வெளி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!