
நயன்தாராவை இங்கு தான் முதலில் பார்த்தேன் - விக்னேஷ் சிவன்
இந்நிலையில் இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் பத்திரிக்கையாளர்களை புதுமண தம்பதியர் விக்னேஷ் சிவன், நயன்தாரா சந்தித்தனர். நயன்தாரா பேசும்போது, ‛‛எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. நாங்கள் தற்போது திருமணம் செய்துள்ளோம். தொடர்ந்து உங்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்க வேண்டும்"" என கேட்டுக் கொண்டார்.
விக்னேஷ் சிவன் பேசும்போது : ‛‛இந்த ஓட்டலில் தான் முதன்முதலில் நான் நயன்தாராவை சந்தித்தேன், அவரிடம் கதையை கூறினேன். அதனாலேயே இந்த நிகழ்வை இங்கு நடத்த விரும்பினோம். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள், நன்றி"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!