
லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கும் ராம் சரண்
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற வேடத்தில் சூர்யா நடித்த நிலையில் இப்படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனின் பேரனாக ராம்சரண் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் படத்தில் சூர்யாவும், ராம்சரண் தேஜாவும் எதிரும் புதிருமான வேடங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்தபடியாக விஜய்யின் 67ஆவது படம் மற்றும் கார்த்தியின் கைதி-2 படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்படும் நிலையில், அதன் பிறகு விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை அவர் இயக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அப்போதுதான் அப்படம் விக்ரம் படத்தின் அடுத்த பாகமா? இல்லை ராம்சரண் தேஜாவை நாயகனாக வைத்து தமிழ், தெலுங்கில் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் படமா? என்பது தெரியவரும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!