
நடிகை பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
பிரணிதா வெளியிட்டுள்ள பதிவில், ‛‛உண்மையிலேயே நான் ஒரு அதிர்ஷ்டசாலி. மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயஸ்ரீ கடினமான நேரங்களாக இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அவரது குழுவில் உள்ள டாக்டர் சுனில் உதவிடன் சீராக பிரசவம் நடைபெற்றது. என்னுடைய பிரசவ வலியை குறைப்பதற்காக முயற்சி எடுத்த டாக்டர் சுபா மற்றும் மயக்க மருந்து நிபுணர் உள்பட மருத்துவக்குழு அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என்னுடைய குழந்தையின் முகத்தை உங்களிடம் காட்டுவதற்கு விருப்பமாக இருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ள பிரணிதா, மருத்துவமனையில் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!