
தமிழ் படம் இயக்கும் பாலிவுட் ஒளிப்பதிவாளர்
திடீரென கொல்லப்பட்ட தன் தங்கையின் மரணத்திற்கு யார் காரணம் என கண் பார்வையற்ற நாயகி தேட ஆரம்பிக்கிறாள். அவளின் தேடலும், அதை தொடர்ந்து நடக்கும் மர்மமான சம்பவங்களும் தான் கதை. பார்வதி நாயர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவரது கணவராக கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார்.
இவர்களுடன் நிழல்கள் ரவி, துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள், இன்ஸ்பெக்டராக தயாரிப்பாளர் அஜய் குமார் சிங் நடித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!