
ஷங்கர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்
ஷங்கர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் படம் இது. அதேபோல ராம்சரணுக்கு ஜோடியாக நடிப்பதும் இதுவே முதல் முறை. கீர்த்தி சுரேஷ் போலோ சங்கர் படத்தில் ராம்சரணின் தந்தை சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தில்ராஜ் தயாரிக்கிறார், தமன் இசை அமைக்கிறார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். படக் கதையில் பிளாஷ்பேக்கில் வரும் சிறிய பீரியட் காட்சிகளில் ராம்சரணுடன் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!