
8 வயது மகனை காக்கும் தாயாக நயன்தாரா
படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கூறியதாவது: ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் பேருந்தில் பயணம் செய்கிறாள். அவளது மகனுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதால் அவனுடன் எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும். அந்த பஸ் ஒரு விபத்தில் சிக்குகிறது. அப்போது பஸ்சுக்குள் இருக்கும் அனைவருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை. அந்த பெண்ணின் மகனிடமிருந்து ஆக்சிஜன் சிலிண்டரை அபகரிக்க அனைவரும் முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் அவள் தன் மகனை எப்படி காப்பாற்றுகிறாள் என்பதுதான் படத்தின் கதை.
தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. தாய் பார்வதியாக நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீனா, ஆர்.என்.ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!