
சினிமாவில் பிசியானார் சரத்குமார்
தற்போது அரவிந்தராஜ் இயக்கத்தில், "பரம்பொருள்" என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். ஒரு காவல் துறை அதிகாரிக்கும், திருடனுக்கும் இடையே நடக்கும் போட்டியே படத்தின் கதை. "ருத்ரன்" படத்தில் ராகவா லாரன்சுக்கு வில்லனாக நடிக்கிறார். இது தவிர பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கிறார்.
விஜய்யின் 66வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விக்னேஷ் ராஜ் இயக்கத்தில் "போர் தொழில்" படத்தில் துப்பறியும் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். திருமலை இயக்கும் சமரன் படத்தில் நடிக்கிறார். இதுதவிர சில தெலுங்கு படத்திலும் ஒரு கன்னட படத்திலும் நடிக்கிறார். சரத்குமாரின் 150வது படம் ஸ்மைல் மேன். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்த படத்தை நவீன் இயக்குகிறார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!