
லட்சுமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: கர்நாடக அரசு வழங்கியது
"சில நேரங்களில் சில மனிதர்கள்" படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது பெற்றார். இதுதவிர தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்குமார் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்கினார். பெங்களூருவில் நடந்த 2017ம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவில் லட்சுமிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!