
டி.ராஜேந்தர் குரலில் ஆல்பம் பாடல் வெளியீடு
இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக "நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க" எனும் பாடல் இலங்கை கவிஞர் அஷ்மின் எழுத்தில், இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில் இயக்குநர் டி.ராஜேந்தர் குரலில் வெளியாகியுள்ளது.
இது குறித்து டி.ராஜேந்தர் கூறியதாவது: இலங்கை மக்களுக்காக அங்கு அவர்கள் படும் கஷ்டத்திற்காக இந்தியா 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உதவியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி. இந்த நிலையில் இலங்கையில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. அந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில், இலங்கை கவிஞர் அஷ்மின் உடன் இணைந்து, இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில், உருவான பாடலை நான் பாடியிருக்கிறேன். என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!