
சந்தானம் நடிக்கும் புதிய படம் துவக்கம்
இதில், சந்தானம் ஜோடியாக, "தாராள பிரபு" படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். மேலும், பாக்யராஜ், பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்தில், கதாநாயகனும், நாயகியும் வெவ்வேறு விளம்பர நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். தொழில் முறை போட்டியில் எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடைபெறும் தொழில்முறை யுத்தம் தான் கதையின் சுருக்கம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!