
கதையை நம்புங்கள், ஹீரோக்களை நம்பாதீர்கள் - ராம்கோபால் வர்மா காட்டம்
அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவிடும் வர்மா, "கேஜிஎப் 2" படம் பார்த்துவிட்டு மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்தை, ஆனால், உண்மையான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
“கேஜிஎப் 2" படத்தின் அசுரத்தனமான வெற்றி தெளிவான ஒரு ஆதாரமாக அமைந்துவிட்டது. ஒரு படத்தின் ஹீரோவுக்கு அதிக சம்பளம் கொடுத்து வேஸ்ட் செய்வதை விட, படத்தின் மேக்கிங்கிற்கு அதிக பணம் செலவழித்தால் பெரிய தரமும், மிகப் பெரிய வெற்றியும் வரும்.
"ஹிந்தித் திரையுலகத்தை விடுங்கள். கேஜிஎப் படம் வரும் வரை தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகம் கன்னட சினிமாவை சீரியசாக எடுத்துக் கொண்டதேயில்லை. ஆனால், இப்போது பிரசாந்த் நீல் அதை உலக வரை படத்தில் வைத்துவிட்டார்.
மும்பைக்கு மிஷின் கன்னுடன் வந்து, ராக்கி பாய் வில்லன்களை எப்படி சுட்டார் என்பதை ரசித்தேன். ஆனால், யஷ், அனைத்து பாலிவுட் ஸ்டார்களின் முதல் நாள் வசூலையும் சுட்டுத் தள்ளிவிட்டார். படத்தின் இறுதி வசூல், கன்னட சினிமாவிலிருந்து பாலிவுட்டிற்கு ஒரு நியூக்ளியர் பாம் போட்டது போல இருக்கப் போகிறது.
பிரசாந்த் நீலின் கேஜிஎப் 2 ஒரு கேங்ஸ்டர் படம் மட்டுமல்ல, அது பாலிவுட்டிற்கு ஒரு ஹாரர் படமும் கூட. அதன் வெற்றியைப் பற்றி அவர்கள் வரும் ஆண்டுகளிலும் கனவு கண்டுகொண்டிருப்பார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!