
‛தொடாதே படம் மூலம் ஹீரோவானார் காதல் சுகுமார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அலெக்ஸ் இயக்குகிறார். குடியைத் தொடாதே, பெண்ணின் விருப்பமில்லாமல் தொடாதே, போதைப் பொருட்களை தொடாதே எனும் கருத்தை மையமாக வைத்து திரைக்கததை அமைத்திருக்கிறார் இயக்குனர் அலெக்ஸ். நடுத்தரக் குடும்பத்திற்கும் கீழான மக்களின் வருமானம் மதுபானக் கடைகளில் சீரழிகிறது. அதை மக்கள் புரிந்து, குறைந்த பட்சமாவது திருந்த வேண்டும் என்கிற நோக்கில், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாராகிறது.
கொடைக்கானல், மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீடும், அதை தொடர்ந்து திரையரங்குகளில் படம் வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!