ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் "பொன்னியின் செல்வன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்க்கு பிறகு இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் "அகிலன்" மற்றும் அகமது இயக்கத்தில் "ஜன கன மண" ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இரும்புத்திரை, ஹீரோ, விஸ்வாசம் போன்ற பல படங்களில் வசனம் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!