
நிச்சயதார்த்தம் முடிந்தது; விரைவில் திருமணம் - நிக்கி கல்ராணி
இதில், யாகவராயினும், மரகத நாணயம் படங்களில் இணைந்து நடித்த நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிப்பட்டது. ஆனால், இருவரும் தொடர்ந்து மவுனம் காத்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் உள்ள நிக்கி கல்ராணியின் பிளாட்டில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் நெருங்கியவர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இது தொடர்பாக நிக்கி கல்ராணி கூறுகையில், ‛எனக்கும் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. திருமண தேதி குறித்து இருவரின் குடும்பத்தார்களும் கலந்து பேசிய பின் முடிவெடுக்கப்படும். திருமண தேதியை விரைவில் நானும் ஆதியும் விரைவில் முறைப்படி அறிவிப்போம்" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!