
புனித் ராஜ்குமாருக்கு டாக்டர் பட்டம்: மைசூர் பல்கலைகழகம் வழங்கியது
அவர் நடித்த கடைசி படமான ஜேம்ஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதுடன் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் மைசூர் பல்கலைக்கழகத்தின் 102 வது பட்டமளிப்பு விழாவில் புனித்துக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவரது மனைவி அஸ்வினி அதனைப் பெற்றுக் கொண்டார். புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமாருக்கும் கடந்த 1976ம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!