
விஜய், அஜித் படங்களை முதல் நாளில் பார்ப்பேன் - சிவராஜ்குமார்
நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ்குமார், “ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் மற்றொரு பக்கம் துக்கமாகவும் இருக்கிறது. அப்பு (புனித்) மறைவின் துக்கத்தில் இருக்கிறோம். நான் ராஜமவுலியின் பெரிய ரசிகர். ஜுனியர் என்டிஆர், ராம்சரண், பவன் கல்யாண், சிரஞ்சீவி, விஜய், அஜித் ஆகியோரது படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். படங்களை எனக்கு வீட்டில் பார்ப்பது பிடிக்காது, தியேட்டர்களில்தான் பார்ப்பேன். தென்னிந்திய சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றவர் ராஜமவுலி. "ஆர்ஆர்ஆர்" படத்தை முதல் நாள் முதல் காட்சியில் கண்டிப்பாகப் பார்ப்பேன்,” என்று பேசினார்.
"ஆர்ஆர்ஆர்" படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய மேலும் சில நிகழ்வுகள் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!