
அரபிக்குத்து 200, ஜாலியோ ஜிம்கானா 10
நேற்று மாலை "பீஸ்ட்" படத்தின் இரண்டாவது சிங்கிளான "ஜாலியோ ஜிம்கானா" வெளியான போது "அரபிக்குத்து" பாடல் 197 மில்லியன் பார்வைகளில் இருந்தது. "ஜாலியோ"வை கேட்ட பின் "அரபிக்குத்து"வையும் மீண்டும் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது.
இப்போது "அரபிக்குத்து" 200 மில்லியன் பார்வைகளையும், "ஜாலியோ ஜிம்கானா" 10 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்களை யு டியுபில் நிறையவே பிரமோஷன் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முந்தைய விஜய் படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தின் வியாபார எல்லையை விரிவாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமா அதை படக்குழுவினர் செய்துவருவதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!