
மீண்டும் நடிகர் சங்க செயலாளர் ஆவாரா விஷால்? நாளை ஓட்டு எண்ணிக்கை
தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாளை (மார்ச் 20) சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கை தேர்தல் அதிகாரி, நடிகர் சங்க தனி அதிகரி மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் எண்ணப்படுகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த தேர்தலில் நாசர் தரப்புக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நடிகர் விஷால் பொதுச் செயலாளராகவும், நாசர் தலைவராகவும், கார்த்தி பொருளாளராகவும் மீண்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!