
எதிரே படத்தில் ரகுமானுக்கு ஏற்பட்ட வித்தியாச அனுபவம்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது தனது டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் ரகுமான். அதுமட்டுமல்ல இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஒரு சுவாரசியமான விஷயத்தையும் அவர் கூறியுள்ளார். அதாவது படப்பிடிப்பில் இவர் பெரும்பாலும் வசனம் பேசியது எல்லாம் "எதிரே" வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியை பார்த்து தானாம். அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் திரில்லராக வித்தியாசமான முறையில் இந்த கதையை கதாசிரியர் சேது உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார் ரகுமான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!