
இசை ஆல்பத்தில் அம்மு அபிராமி
இந்த நிலையில் போகாதே என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். திரைப்படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வரும் சி சத்யா, முதன்முறையாக இந்த இசை ஆல்பத்துக்கு இசை அமைத்துள்ளார்.
இயற்கையின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தி அன்பை விதைக்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளது. 2021ம் ஆண்டு வெளியான தீதும் நன்றும் திரைப்படத்தை இயக்கிய ராசு ரஞ்சித் இயக்கியுள்ளார்.
லாவரதன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பிரபல இந்தி பாடகரும் சல்மான் கான் நடித்த ரேஸ் 3 படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருமான ஷிவாய் வியாஸ் பாடியுள்ளார். அம்மு அபிராமியின் பிறந்த நாளான நேற்று (மார்ச் 16) இந்த ஆல்பம் வெளியிடப்பட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!