சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது
மார் 08, 2022
Advertisement
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா, வினய் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‛எதற்கும் துணிந்தவன்". மார்ச் 10ல் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. சூர்யாவின் முந்தைய இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த படம் தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பா.ம.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சூர்யாவின் முந்தைய படமான ஜெய் பீம் படம் பாராட்டை பெற்றாலும் அதில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக சர்ச்சையும் வெடித்தது. இதற்கு பா.ம.க.வினர் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் இதையே காரணம் காட்டி ஜெயம் பீம் பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவரது படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என பா.ம.கட்சியின் மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் கடலூர் மாவட்டத்தில் சூர்யா படம் திரையிடுவதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!