
உக்ரைன் மக்களுக்காக நிதி உதவி கேட்கிறார் எமி ஜாக்சன்
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரின் காரணமாக ஆயிரக் கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில பாதாள அறைகளில் உள்ள பச்சிளம் குழந்தைகளின் வீடியோவை வெளியிட்டு எமி ஜாக்சன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அது வருமாறு: உக்ரைனின் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. உக்ரைன் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு அவசர நிதி தேவை. தயவுசெய்து எனது பயோவில் உள்ள இணைப்பின் மூலம் நன்கொடை அளிக்கவும். என்று குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!