தில்லுக்கு துட்டு 3 ஆம் பாத்தில் சந்தானம் : இயக்குனர் மாற்றம்
பிப் 27, 2022
Advertisement
சந்தானம் நடிப்பில் கடந்த 2016ல் வெளியாகி ஹிட்டான திரைப்படம் "தில்லுக்கு துட்டு". இப்படத்தை "லொள்ளு சபா" ராம்பாலா இயக்கியிருந்தார். மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தானம் மற்றும் ராம்பாலா கூட்டணியில் "தில்லுக்கு துட்டு" படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் பாகத்தை ராம்பாலாவிற்கு பதிலாக ராம்பாலாவின் இணை இயக்குனர் ஆனந்த இந்த படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேசமயம் நாயகனாக சந்தானமே தொடர உள்ளாராம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!