
குடிபோதையில் போலீசை தாக்க முயன்ற நடிகை காவ்யா தாபர் கைது
இதைப்பார்த்த அந்த பகுதியை மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து நடிகை காவ்யா தாபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன் விசாரணை நடத்திய பெண் போலீசின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயற்சித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் காவ்யா தாபரை கைது செய்தனர்.
குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, பணியில் இருந்த போலீசாரை கடமையை செய்ய விடாமல் தடுத்து, தாக்க முற்பட்டது என பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!