
மகள், மருமகனை சேர்க்க ரஜினி தீவிர முயற்சி
"இருவரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இன்னும் விவாகரத்து பெறவில்லை. அதனால், இருவரும் சேர வாய்ப்புள்ளது" என, தகவல் வெளியான நிலையில், தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில், ரஜினி இறங்கினார். முதலில் ஐஸ்வர்யாவிடம் பேசிய ரஜினி, "உன் பிள்ளைகள் எதிர்காலத்தை விட, உன் விருப்பம் முக்கியமாகி விட்டதா?" என காட்டமாக கேட்டுள்ளார். ரஜினியின் கடுமையான கண்டிப்புக்கும் அறிவுரைக்கும் பின், சில நிபந்தனைகளுடன் தனுஷுடன் சேர்ந்து வாழ முன்வந்தார் ஐஸ்வர்யா. ஆனால், தனுஷ் தரப்பில் இருந்து இன்னும் சாதகமான பதில் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், தனுஷ் தந்தை கஸ்துாரிராஜாவிடமும், தனுஷிடமும் பேசி, சமாதான நடவடிக்கைகளை, ரஜினி தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரியாமல் தடுக்க, பேரன்கள் வாயிலாகவும் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார் ரஜினி. பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற பயம் காரணமாக, மகளையும், மருமகனையும் சமாதானப்படுத்த, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார் ரஜினி. அதற்கு விரைவில் பலன் கிடைக்கும் என்கிறது, அவரது குடும்ப வட்டாரம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!