
வலிமை அப்டேட் கொடுத்தது நான் அல்ல - பதறும் ஸ்டண்ட் மாஸ்டர்
அந்தவகையில் தற்போது அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள வலிமை படம் குறித்து அந்தப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், “வலிமை முதல் பாதி முழுவதும் புலன் விசாரணையாக இருக்கும். இடைவேளைக்குப்பின் ஆக்சன் மற்றும் சென்டிமென்ட்டாக இருக்கும்” என சமீபத்தில் வெளியிட்டிருந்ததை பார்த்து அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தார்கள்.
அப்டேட்டே கொடுக்காத மனிதர்கள் மத்தியில், பரவாயில்லையே.. படத்தின் கதை நகரும் விதத்தையே இவர் சொல்லிவிட்டாரே என ரசிகர்கள் அவரை பாராட்ட ஆரம்பித்து விட்டனர். ஆனால் அந்த தகவல் திலீப் சுப்பராயன் கவனத்துக்கு சென்றதும் மனிதர் பதறிப்போய் விட்டார். காரணம் அது அவரது ஒரிஜினல் சமூகவலைதள கணக்கு அல்ல..
இதை தெரியப்படுத்தியுள்ள திலீப் சுப்பராயன், அந்த நபரின் கணக்கு குறித்து புகார் அளியுங்கள். அந்த கணக்கை பிளாக் செய்யுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!