
புனித் பிறந்தநாளில் மரியாதை : படங்களின் வெளியீட்டை தள்ளிவைத்த திரையுலகம்
அவர் இறப்பதற்கு முன்னதாக மூன்று படங்களில் நடித்திருந்தார்.. அதில் இரண்டு படங்களில் சில நிமிடங்கள் வந்துபோகும் கெஸ்ட் ரோல் தான். இதில் ஜேம்ஸ் என்கிற படத்தில் மட்டும் ஹீரோவாக நடித்திருந்தார். அவர் இறப்பிற்கு முன்னதாகவே அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருந்தது.
இந்தநிலையில் வரும் மார்ச்-17 ஆம் தேதியன்று புனித்தின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் ஜேம்ஸ் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் புனித் ராஜ்குமாரை கவுரப்படுத்துவதற்காகவும், அன்றைய தினத்தில் இருந்து அடுத்த வாரம் வரை வேறு எந்த படங்களையும் ரிலீஸ் செய்வதில்லை என கன்னட திரையுலகத்திலும் விநியோகஸ்தர்கள் தரப்பிலும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!