
மெசேஜ் சொல்ல ஆசைப்படும் திவ்யதர்ஷினி
இந்த நிலையில் திவ்யதர்ஷினி அளித்துள்ள ஒரு பேட்டியில், தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்திற்கு ஏதேனும் நல்ல மெசேஜ்களை சொல்ல ஆசைப்படுவதாக கூறுகிறார். அதோடு தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் நான் நடித்த வேடத்தில் பெண்களுக்கு ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும்.
அதை உங்களைப் போன்ற அனைவருக்கும் பரிச்சயமான பிரபலத்தை வைத்து சொன்னால் பெரிய அளவில் மக்களைப் போய்ச் சேரும் என்று சொல்லியே நடிக்க வைத்தார் தனுஷ். அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் தான் நடித்தேன். அது என்னை பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. அதனால் அது போன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் டிடி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!