
ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு ; உடனடியாக சவுந்தர்யா செய்த காரியம்
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் விசாகன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் தனது சகோதரி ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷுடனான பிரிவு செய்தியை வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே, சமூக வலைதளப் பக்கத்தில் தனது புரொபைல் படத்தை மாற்றிவிட்டார்.
தனது சகோதரிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தானும் ஐஸ்வர்யாவும் சிறு குழந்தைகளாக இருந்தபோது தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது புரொபைல் பிக்சராக மாற்றி வைத்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!