
தனுஷ் - ஐஸ்வர்யா, இரண்டு மாதத்தில் ஏற்பட்ட பிரிவா?
தனுஷ் அவரது மாமனார் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் சொந்தமாக ஒரு வீட்டையும் கட்டி வருகிறார். கடந்த அக்டோபர் மாதக் கடைசியில் டில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த், தனுஷ் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். அப்போது கூட சமூக வலைதளத்தில் அவர்கள் இருவரின் புகைப்படங்களைப் பகிர்ந்து “அவர்கள் என்னவர்கள், இது ஒரு வரலாறு, பெருமைமிகு மகள், பெருமைமிகு மனைவி” என ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார்.
அதற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்பு தனுஷ் ஹிந்தியில் நடித்த "அத்ராங்கி ரே" பட டிரைலர் வெளியீட்டின் போது படக்குழுவினரைப் பாராட்டி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடந்ததோ தெரியவில்லை, நேற்று ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் இவர்களது பிரிவு பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த், தனுஷ் இருவரது ரசிகர்களும் ஒரு படி மேலே போய் ஒருவரை, மற்றொருவர் தாக்கும் பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!