
கடல் கன்னியாக ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படம்
இப்படத்தை, மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர், "துப்பாக்கி முனை" என்ற படத்தை இதற்கு முன் இயக்கி உள்ளார். இந்த படத்திற்காக சென்னை தி.நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் செட்டி போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து திருச்செந்தூர் மணப்பாடு என்கிற இடத்தில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும். 2022 கோடையில் படம் வெளியாக உள்ளது. படத்தில் அதிகளவில் அனிமேஷன் காட்சிகள் உள்ளன. படம் முடிந்ததும் இதற்கான பணிகள் துவங்குகின்றன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!