
ஒமிக்ரான் அச்சுறுத்தல்; பெரிய படங்களுக்கு பாதிப்பு?
இந்தியத் திரையுலகின் மையமான மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால், இரவு நேரக் காட்சிகள் நடைபெற வாய்ப்பில்லை. ஏற்கெனவே அந்த மாநிலத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான்-இந்தியா படங்களாக அடுத்த மாதம் "ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்" ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. ஒமிக்ரான் பரவல் மேலும் அதிகரிக்கப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
50 சதவீத இருக்கைகள், இரவு நேர ஊரடங்கு என வந்தால் தமிழிலும் வெளியாகும் படங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள "வலிமை" படம் வெளியாக உள்ளது. இந்த புதிய சிக்கலால் வசூல் குறைய வாய்ப்புள்ளது.
ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் யோசிக்க ஆரம்பித்தால் தியேட்டர்கள் பக்கமும் வர மாட்டார்கள். அடுத்த பத்து நாட்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் படங்களின் வெளியீடும் அமையும். பெரிய அளவில் இந்தப் பெரிய படங்களுக்கு வியாபாரம் நடந்துள்ள நிலையில் படங்களை தள்ளி வைப்பார்களா அல்லது வருவது வரட்டும் என படங்களை வெளியிடுவார்களா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!