
சிவகார்த்திகேயனை இயக்கும் யோகிபாபு பட இயக்குனர்
டிச 16, 2021
Advertisement
டாக்டர் படத்தை அடுத்து தற்போது டான் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்குகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் இரு மொழி படத்தில் நடிக்கிறார். இதை முடித்தபிறகு யோகி பாபு நடித்த மண்டேலாபடத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படமும் மண்டேலா படத்தை போன்று சமூகப் பிரச்சினையை கூறும் ஒரு மாறுபட்ட கதையில் உருவாக உள்ளதாம்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!