
பான் இந்தியா ரிலீசாக எதற்கும் துணிந்தவன்
சூர்யாவின் படம் தியேட்டர்களில் முதன் முறையாக பான் இந்தியா ரிலீஸாக வெளியாவது இதுவே முதன்முறை.. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சூர்யாவின் படங்களுக்கென அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். கன்னடத்தில் ஓரளவுக்கு ரசிகர்கள் இருந்தாலும் ஹிந்தியில் இதுவரை நேரடியாக சூர்யாவின் படங்கள் தியேட்டரில் ரிலீசானதில்லை.
அதேசமயம் சூர்யாவின் முந்திய இரண்டு படங்களான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்கள் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் என்கிற பெருமையை ஜெய்பீம் பெற்றுள்ளது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் இந்தப்படத்தை பான் இந்தியா ரிலீஸாக 5 மொழிகளில் வெளியிடும் முடிவை எடுத்துள்ளார்கள் என்றே திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.
முதல் பாடல்
இதனிடையே இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை(டிச., 15) மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு ஒரு சிறு வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டி.இமான் இசையமைக்க, டைரக்டர் விக்னேஷ்சிவன் பாடலை எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், அனிருத் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். அந்த வகையில் அந்த பாடலில் சூர்யா, டி.இமான், விக்னேஷ்சிவன், ஜி.வி.பிரகாஷ், அனிருத் என ஐந்து பிரபலங்கள் இணைந்துள்ளனர். வருகிற பிப்ரவரி 4-ந்தேதி ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!