
தென்னிந்திய சினிமா பிறந்ததே சென்னையில் தான்!; ஆர்ஆர்ஆர் படக்குழு பேட்டி
நடிகை ஆலியா பட்: என் திரை பயணத்தை இங்கு தான் ஆரம்பித்தேன்; மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு இயக்குனர் தான், நான் நடிப்பதை முடிவு செய்ய வேண்டும். இயக்குனரின் பார்வை முக்கியம். நான் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புகிறேன். இப்படத்தில் நடித்தது, இனிமையான அனுபவமாக இருந்தது.
ராம்சரண்: ராஜமவுலியுடன் வேலை செய்வது சவாலானது. நான் பிறந்தது சென்னை; தமிழ் என் இரண்டாவது தாய்மொழி. தமிழில் பேசியது சிறந்த அனுபவமாக இருந்தது.
ஜூனியர் என்.டி.ஆர்.,: ராஜமவுலி என் மீது அதிக நம்பிக்கை வைத்தார். அதுவே எனக்கு பயத்தையும் தந்தது. தென்னிந்திய சினிமா பிறந்ததே சென்னையில் தான். தமிழுக்கும், சினிமாவுக்குமான தொடர்பை மறுக்க முடியாது.
ராஜமவுலி: சென்னை தான் எனக்கு சினிமா கற்றுத்தந்தது. படம் எடுக்கும் போதே, பெரிய படம் என்று சொல்ல முடியாது. ரசிகர்கள் தான் படத்தை பெரிய படம் என்று சொல்ல வேண்டும். ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என ஆசை தான். ஆனால், கதை தான் நாயகனை தீர்மானிக்க வேண்டும். பாகுபலி வெற்றிக்கு காரணம், "எமோஷன்" தான். ஆர்ஆர்ஆர் படத்தில் அந்த, "எமோஷன்" அதிகம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!