
த்ரிஷ்யம் 3க்கு 50 - 50 சான்ஸ் தான் இருக்கு : ஜீத்து ஜோசப்
இதுகுறித்து அவர் கூறும்போது, “த்ரிஷ்யம் படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட ஏற்படவில்லை. பின்னர் ஒருகட்டத்தில் அதற்கான ஸ்கிரிப்ட் தயாரானதும் தான் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தோம். ஆனால் இப்போது நிலைமை வேறு. இரண்டாம் பாகத்தின் வெற்றியால், இதன் மூன்றாம் பாகத்தை எப்போது துவங்க போகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள்.
சொல்லப்போனால் மூன்றாம் பாகத்திற்கான க்ளைமாக்ஸ் கூட நான் யோசித்து வைத்துவிட்டேன். அதை மோகன்லாலிடம் சொல்ல அவருக்கும் அது பிடித்துப்போய் விட்டது. ஆனால் க்ளைமாக்ஸ் வரை சரியான பாதையில் கதையை நகர்த்திக் கொண்டு வர காட்சிகள் வேண்டும் இல்லையா..? அதில் தான் சவால் இருக்கிறது. தற்போது அதற்கான ஸ்கிரிப்ட் வேலையிலும் இருக்கிறேன்..
அதேசமயம் மனதிற்கு திருப்தியான ஸ்கிரிப்ட் தயாரானால் தான் மூன்றாம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி மூன்றாம் பாகத்தை உருவாக்கியே தீர வேண்டும் என்பதற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன். பேசாமல் அந்த திட்டத்தை அப்படியே போட்டுவிடுவேன்.. அதனால் இப்போதைக்கு சொல்வதென்றால் த்ரிஷ்யம் 3 படத்தை உருவாக்குவதற்கு 50 - 50 சான்ஸ் தான் இருக்கிறது” என கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!