
சர்வதேசத் திரைப்படத்தில் சமந்தா
திமெரி என்-முராரி என்ற இந்திய எழுத்தாளர் எழுதியுள்ள நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாம். இருபால் சேர்க்கை உணர்வு கொண்டு ஒரு தமிழ்ப் பெண்ணாக சமந்தா இப்படத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.
"த பேமிலி மேன் 2" இணையத் தொடருக்குப் பிறகு சமந்தாவைத் தேடி நிறைய பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சர்வதே அளவில் உருவாக உள்ள படத்தில் அவர் நடிக்க இருப்பதற்கான வாய்ப்பும் கிடைக்க அந்த இணையத் தொடர்தான் காரணம் என்கிறார்கள்.
இது பற்றிய அமெரிக்க இணையதள செய்தி ஒன்றைப் பகிர்ந்து, “முற்றிலும் புதியதொரு உலகம்” என சமந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து சமந்தா, “"அரெஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்" படத்தில் இடம் பெறுவதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. அனு-வாக இருப்பதற்கு என்னைத் தேர்வு செய்ததற்கு நன்றி பிலிப் ஜான் சார். இந்த அற்புதமான பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!