
ரூ.50 கோடி கிளப்பில் இணைந்த குருப்
“வாவ். நிச்சயமாக இது பெரிய தொகை தான். தூக்கமில்லாத உறவுகள், நிச்சயத்தன்மை இல்லாத, சுய சந்தேகங்களை கூட ஏற்படுத்திய நிகழ்வுகள், டென்சன் மற்றும் மன அழுத்தம் என நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் மொத்தமாக பலன் கிடைத்துள்ளது. மீண்டும் தியேட்டர்களுக்கு வந்ததற்கும் எங்களை ஏற்றுக்கொண்டதற்கும் மிக்க நன்றி” என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
தற்போது தென்னிந்திய மொழிகளையும் தாண்டி இந்தியிலும் துல்கர் சல்மான் நடித்து வருவதால் அவரது படங்களுக்கான வியாபர எல்லையும் விரிவடைந்துள்ளது. அதனால் குருப் படத்தை பான் இந்தியா படமாக இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டார்கள். அதன் காரணமாகத்தான் நான்கு நாட்களில் இந்த வசூலை இந்தப்படம் எட்டியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!