
பிரிவுக்குப் பின் சமந்தாவின் முதல் பயணம்
“டேக் ஆப், முதலில் யமுனோத்ரி” என அவர் குறிப்பிட்டுள்ளார். வட இந்தியாவில் சர் தம் யாத்ரா என்பது இந்துக்கள் அதிகம் செல்லும் ஒரு யாத்திரை. இமாலய மலைப் பிரதேசங்களான கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குச் செல்லும் யாத்திரை அது. உத்தரகாண்ட்டில் கடும் மழை பெய்ததால் இன்னும் பத்ரிநாத் செல்வதற்கான சாலைகள் திறக்கப்படவில்லை.
கிறிஸ்துவராக இருந்தாலும் சமந்தா இந்து மதக் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருவார். தற்போது வட இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
விஜய் சேதுபதி, நயன்தாரவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!