
தமிழில் ரீமேக் ஆகிறது, தெலுங்கு விவாஹ போஜனம்பு
எதற்கெடுத்தாலும் கணக்கு பார்க்கும் சிக்கனவாதியான ஹீரோ, பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்கிறார். மகள் ஏழையை மணப்பதை விரும்பாத பணக்கார தந்தை திருமண செலவை மாப்பிள்ளைதான் ஏற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். சிக்கனவாதியான ஹீரோ எப்படி திருமண விருந்தை செலவில்லாமல் நடத்தலாம் என்று யோசிக்கும்போது கொரோனா ஊரடங்கு அமுலுக்க வருகிறது. திருமணத்துக்கு 30 பேருக்கு மேல் கூடக்கூடாது என்பது அதில் ஒன்று. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. ஒரே வீட்டுக்குள் நடக்கும் காமெடி கதையாக இது உருவாகி இருந்தது.
தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இதன் ரீமேக் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், இயக்குநர் யார் உள்ளிட்ட விவரத்தினை அறிவிக்கவில்லை. குறுகியகால தயாரிப்பாக இந்த படத்தை தயாரிக்க ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!