
இரண்டு நாட்களில் ஷங்கர் - ராம் சரண் படம் ஆரம்பம்
"இந்தியன் 2" படத்தை இன்னும் முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டுத்தான் ராம் சரண் படத்திற்குச் சென்றுள்ளார் ஷங்கர். சமீபத்தில் "இந்தியன் 2" படத் தயாரிப்பாளரை ஷங்கர் நேரில் சந்தித்துப் பேசி "இந்தியன் 2" படத்தின் படப்பிடிப்பையும் மீண்டும் ஆரம்பிக்கிறேன் என உறுதி அளித்துள்ளார். ஆனால், அவர் அப்படி செய்யாமல் ராம் சரண் படம் இயக்கச் சென்றுவிட்டார். இதனால், "இந்தியன் 2" தயாரிப்பாளர் கோபமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
எனவே, ராம் சரண் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை புனேவில் வரும் 22ம் தேதி முதல் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை முடித்த பிறகுதான் "இந்தியன் 2" பக்கம் ஷங்கர் வருவாரா அல்லது இடையில் வருவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!