
விஜய் பற்றி சொல்ல ஒரு வார்த்தை போதாது - பூஜா ஹெக்டே
பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் அகில், பூஜா ஹெக்டே நடித்து கடந்த வாரம் வெளிவந்த "மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர்" தெலுங்குப் படம் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளையும் கொண்டாடிய பூஜா, டுவிட்டர் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர், “விஜய் பற்றி ஒரு வார்த்தை” எனக் கேட்டதற்கு, “ஒரு வார்த்தை போதாது, இருந்தாலும் நான் டிரை செய்கிறேன், “ஸ்வீட்டஸ்ட்” என பதிலளித்தார். இந்த ஒரு வார்த்தை போதுமே பூஜாவை விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு.
பூஜா தற்போது "பீஸ்ட்" தவிர, “ஆச்சார்யா, சர்க்கஸ், பைஜான்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!