
விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண்
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பவன் கல்யாணிடம் ‛‛விஜயின் அரசியல் பார்வை மற்றும் அவருக்கு ஏதேனும் அறிவுரை எதுவும் வழங்கினீர்களா"" என்பது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‛‛விஜய் என்றில்லை பொதுவாகவே யாருக்கும் நான் அறிவுரை சொல்வதில்லை. அது என் பிள்ளைகளாக இருந்தாலும் கூட சொல்ல மாட்டேன். காரணம் ஒவ்வொருவருக்கும் சுயமாக யோசிக்கும் திறன் உள்ளது. அப்படித்தான் விஜய்க்கும். அவர் பெரிய ஸ்டார் நடிகர், அவருக்கு நான் அறிவுரை சொல்ல தேவையில்லை. ஜனநாயக நாட்டில் மக்களுக்கு சேவை செய்ய எந்த குடிமகனும் அரசியலுக்கு வரலாம், அரசியல் கட்சி துவங்கலாம்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்அரசியல் அறிவு இல்லையே?