மீண்டும் வித் லவ் கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல்
பிப் 13, 2026
Advertisement
2025ம் ஆண்டின் வெற்றிப் படமான "டூரிஸ்ட் பேமிலி" படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். கடந்த வாரம் வெளிவந்த "வித் லவ்" படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமனார். நேற்று இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்துப் பேசினர். அப்போது அபிஷன் ஜீவிந்த், “அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பு இப்போதே நான் சொல்லிவிடுகிறேன். தயாரிப்பாளர்கள் சவுந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ஆகியோருடன் இணைந்து நான் மீண்டும் ஒரு படம் செய்ய இருக்கிறேன்,” என்றார்.
அப்படத்தை அவர் இயக்கப் போகிறாரா, நடிக்கப் போகிறாரா அல்லது இயக்கி நடிக்கப் போகிறாரா என்பது பட அறிவிப்பின் போது தெரிய வரும்.
"வித் லவ்" படத்தை இணைந்து தயாரித்துள்ள மகேஷ் பசிலியான், "குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி" ஆகிய படங்களையும் இணைந்து தயாரித்துள்ளார். "ஹேப்பி என்டிங்" படத்தைத் தயாரித்து வருகிறார். சவுந்தர்யா ரஜினிகாந்த் "வித் லவ்" படத்தை இணைந்து தயாரித்து தனது முதல் வெற்றியைத் தயாரிப்பாளராகப் பெற்றுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!