பத்தா வெளியீட்டில் சிக்கல் வருமா...
செப் 21, 2026
Advertisement
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பத்தா படம், அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்து இருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமை பண்பு குறித்து விஜய்சேதுபதி பேசிய பேச்சுகள் வைரல் ஆகின. அவர் தமிழக முதல்வர் விஜயை மறைமுகமாக தாக்கியிருக்கிறார். அவர் திமுக ஆதரவாளர், கடந்த ஆட்சியில் இப்படி யாரையும் பேசியது இல்லை என விமர்சனங்கள் வந்தன. இதனால், பத்தா பட வெளியீட்டில் சிக்கல் வரலாம் என படக்குழுவினர் கலக்கம் அடைந்தனர். உரிய தியேட்டர் கிடைக்குமா என்று கவலைப்பட்டனர்.
ஆனால், பத்தா பாடல் வெளியீட்டு விழாவில் தனக்கும், முதல்வர் விஜய்க்குமான நட்பு பற்றி பேசினார் விஜய் சேதுபதி. அவர் தனக்கு போன் செய்தததை குறிப்பிட்டார். அதே விழாவில் தயாரிப்பாளர் அட்லியுயும் முதல்வரை புகழ்ந்தார். இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனிப்பட்ட முறையில் பேசுவது இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே. நான் சொல்லும் அட்வைஸ், கருத்து இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே என விஜய்சேதுபதி விளக்கம் அளித்தார். இதனால், கடந்த வாரம் அவர் பேசியதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என்ற கோணத்தில் பார்க்கப்பட்டது. இதனால், அக்டோபர் 1ம் தேதி பத்தா பட ரிலீசுக்கு எந்த சிக்கலும் வராது என்கிறார்கள். முதல்வர் விஜயும், அட்லியும் நல்ல உறவில் இருப்பதால் இதில் சிக்கலுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லையாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!