
அப்பா, மகன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகுமா? ஒரே நாளில் போட்டி போடுமா?
விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" படத்தின் சென்சார் சான்றிதழ் மிக விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்கள். எப்படியும் வெளியீட்டு வேலைகளைப் பார்க்க ஒரு மாத காலம் ஆகிவிடும்.
அப்படி நடந்தால் ஜூலை 31ம் தேதி அதற்கான சரியான தேதியாக இருக்கும். ஆனால், அன்றைய தினம்தான் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள "சிக்மா" படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பா விஜய், மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோரது கடைசி மற்றும் முதல் படங்கள் ஒரே நாளில் போட்டியிடும் சூழலை நிச்சயம் உருவாக்க மாட்டார்கள். எனவே, இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவே வாய்ப்புகள் அதிகம். எது நடக்கப் போகிறது என்பதைப் பார்க்க சற்றே காத்திருப்போம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!