ஹீரோவாக ஜெயிப்பாரா ஆர்.ஜே.விஜய்
ஏப் 07, 2026
Advertisement
தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் ஆர்.ஜே.விஜய். ஒரு நிகழ்ச்சிக்கு பல லட்சங்களில் சம்பளம் பெறுபவராக இருக்கிறார். ஆனாலும் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அமீர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது அந்த படம் டிராப் ஆனது. சிவகார்த்திகேயன் நடித்த "டான்" உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.
தற்போது "வைப்" என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளிடையே வரும் பிரச்னைகளை மையமாக கொண்டு படம் தயாராகிறது.
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கிறார், ஹேமநாதன் இயக்குகிறார். ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. கோடை விடுமுறை நாளில் படம் வெளியாகிறது. தொகுப்பாளராக உச்சம் தொட்ட ஆர்ஜே விஜய் ஹீரோவாக ஜெயிப்பரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிய வரும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!